Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
உயர்கல்வி அமைச்சிலிருந்து பதுளை உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு பயணித்த வான், பதுளை-பண்டாரவளை வீதி, உடுவர 9மைல்கல் பகுதியில், இன்று அதிகாலை மதிலொன்றில் மோதி வடிகானில் விழுந்து விபத்துக்குள்ளானதில், வானின் சாரதி காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த வானின் சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்தால், மதிலுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயர்கல்வி அமைச்சு சொந்தமான வானே, உயர்தரப்பரீட்சைக்கான வினாப்பத்திரங்களை கொண்டுச் செல்லும்போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே இவ்விபத்துக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago