Janu / 2025 ஜூலை 16 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாசனை திரவியத்தை (perfume) நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக புதன்கிழமை (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் உள்ள ஒரு முன்னணி தமிழ்ப் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் புதன்கிழமை (16) அன்று ஒரு வாசனை திரவியைத்தை தனது தோழர்கள் மீது தெளித்துள்ளதாகவும், பின்னர் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரிடம் விசாரித்தபோது, 6 ஆம் வகுப்பு கள்வி கற்கும் மாணவன் ஒருவன் தலைவலிக்கு பயன்படுத்தப்படும் மருந்தை வாசனை திரவியம் என நினைத்து கொண்டு வந்து தனது வகுப்பு தோழர்கள் மீது தெளித்துள்ளதாக கூறினார்.
ரஞ்சித் ராஜபக்ஷ

5 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago