2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பலவந்தமாக எரிபொருளைப் பெற்ற குண்டர்கள்

R.Maheshwary   / 2022 ஜூலை 18 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- நுகவெல எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 3 வாரங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம்(16) எரிபொருள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஒரு வாரத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்த சுகாதார தரப்பினருக்கு  எரிபொருள் விநியோகிக்கப்படாமையால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அத்துடன் தடி, பொல்லுகளுடன் வருகைத் தந்த சிலர் வரிசையில் காத்திருந்த சுகாதாரப் பணியினரை விரட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதால் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

16ஆம் திகதி சுகாதார பணியாளர்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், ஒரு வாரமாக சுகாதார பணியாளர்கள் அங்கு வரிசைகளில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் எரிபொருள் கொள்கலன் ஒன்று அங்கு வருகைத் தந்தவுடன், தடி, பொல்லுகளுடன் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்த சிலர், பலவந்தமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதுடன், கண்டி- குருநாகல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X