Gavitha / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடையில் பல கிராமப்புறப் பகுதிகளை, மயில்கள் ஆக்கிரமித்து வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பலாங்கொடை நகருக்கு அண்மித்த கஹட்டபிட்டிய, ஹபுகஹகும்புற, பட்டுகம்மன போன்ற பிரதேசங்களில் மயில்கள் அதிகளவில் வந்து செல்வதாகவும் விவசாயிகளின் நெல், மரக்கறி, பழவகைகளை இவை நாசப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
எனினும், இவற்றக்கு தீங்கு விளைவிக்காமல், மக்கள் கருணைக் காட்டுவதால், இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மயில்களையும் பாதுகாத்து, தங்கள் விவசாயத்தையும் பாதுகாக்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026