Kogilavani / 2016 ஜூன் 05 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
கணித துறையை மேலும் சக்திப்படுத்துத்துவதற்காக, பல நாடுகள் ஒன்றினைந்து IMC (International Mathematics Competition) என்ற பெயரில்; அமைப்பொன்றை ஆரம்பிததுள்ளது.
அதன் மூலம் கணிதத்துறையில் 'ஒலிம்பியாட்' போட்டிகளை நடத்தி அதை தேசிய மட்டத்தில் கொண்டுச்செல்வதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி IMC (International Mathematics Competition) அமைப்பு சப்ரகமுவ மாகாண சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த செயலமர்வு, கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை உல்லாச விடுதியில் கடந்த வியாழக்கிழமை(2) ஆரம்பமானது.
தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இச்செயலமர்வில், பல்வேறு நாடுகளிலிருந்தும் 19 அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிநாடுகளில் நடைபெற்று வரும் தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து ஆசிரியர், பாடசாலை மாணவர் பங்குப்பற்றி வருகின்றனர்.
மேற்படி மாகாணத்தில் உள்ள மாணவரினது கணிதத்துறையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் வெளிநாடு செல்வதற்கான விசேட புலமைப்பரிசை மாணவருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய மட்டத்திலான கணித ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.


34 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago