Sudharshini / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த ஒருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பெருந்தொகையான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் திங்கட்கிழமை (12) தெரிவித்தனர்.
பதுளை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசல் நிர்வாக குழுவினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை தேடிவருகின்றனர்.
மேற்படி சந்தேக நபர், பள்ளிவாயிலில் கடவுச்சீட்டின் பிரதியொன்றை விட்டுச்சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து நோர்வூட், நோட்டன், கினிகத்தேன, ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் வட்டவளை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026