Gavitha / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை பிரதேசத்தில், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாத்திரம், நேற்று (30), நிவாரண உணவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எனினும், தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவைப் பேணினார்கள் என்ற பேரில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருள்கள் வழங்கப்படாதமைக்கான காரணம் என்ன என, கேள்வி எழுந்துள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் குடும்பம் தவிர்த்த அவர்களுடன் தொடர்பைப் பேணிய மற்றையவர்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இது தொடர்பில் தோட்டப்பகுதிகளுக்கு பொருப்பான கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மாவட்ட பிரதேச செயலாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026