2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பழமையான மரங்களை வெட்டியதற்கு வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு

Mayu   / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்,  டி.சந்ரு

நுவரெலியா நகரில் பிரசித்தி பெற்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கம் பணிக்காக வீதியோரம் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார்  அனுமதி வழங்கியது? என பிரதேசவாசிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் நுவரெலியா வர்த்தக சங்கத்தினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கமைய, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக தற்போது வரை ஒரு மரம் கூட நடப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்க சென்ற போது முறைப்பாடினை ஏற்றுக்கொள்ள வில்லை எனவும்  அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட  பிரதேச செயலாளர் இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என நுவரெலியா வர்த்தக சங்க உறுப்பினர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் உயர் அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து கடிதம் அனுப்பிவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X