Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூலை 31 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதி, மஹவெல- திம்புல்கமுவ பிரதேசத்தில், இன்று (31) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த 27 பேர், நாலந்த, மாத்தளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸானது, நாவுலயிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராக இருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸூடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்களில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் உள்ளடங்குகின்றனர் என்றும் இவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான 14 பேர், நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில், இ.போ.ச பஸ்ஸின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்றுத் தெரிவித்த பொலிஸார், தனியார் பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதுடன், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .