2026 ஜனவரி 21, புதன்கிழமை

பாக்.உயர்ஸ்தானிகரிடம் செந்தில் வருத்தம் தெரிவிப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோயிலை கும்பலொன்று சேதப்படுத்திய
சம்பவத்துக்காக, பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் ஹமீட்டிடம் தனது  வருத்ததை  தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், அங்கு வாழும் இந்து சமூகங்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்,
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து கோயிலைப் பாதுகாத்து, விரைவில் புனரமைக்கவும் நடவடிக்கையெடுக்குமாறும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, தூதுவர் அப்சல் மரிக்காருடன் தொலைப்பேசியினூடாக தொடர்புக்
கொண்டு மேலதிக கலந்துரையாடலையும் செந்தில் தொண்டமான் நடத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X