Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Kogilavani / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவை மற்றும் கேர்க்கஸ்வோல்ட் ஆகிய தோட்டப் பகுதிகளில், கொரேனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால், மேற்படி பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சில ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைக் குறைவடைந்துள்ளதால் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொகவந்தலாவை ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தின் கொவிட் 19 பாதுகாப்புக் குழுவின் கூட்டம், பாடசாலையில், நேற்று (21) நடைபெற்றது.
மாணவர்களின் நலன்கருதி, பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு ஆலோசிக்கப்பட்டதுடன், பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொதுசுகாதார பரிசோதகருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படிக் குழுவினர் வழங்கிய கடிதத்தை, கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக, பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி வை.பி.எல்டி.பஸ்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நேற்று (21) இரவு வெளியான பிசிஆர் அறிக்கைக்கு அமைவாக, பொகவந்தலாவ வானக்காடு தோட்டத்தில் இருவருக்கும் எல்டொப்ஸ் தோட்டத்தில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பொதுசுகாதார காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இதுவரை 118 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago