Editorial / 2023 மே 02 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
பாடசாலை மாணவர்கள் சிலரை, குளவிகள் கலைந்து இன்று (02) காலை கொட்டியதை அடுத்து, பாடசாலை இழுத்து மூடப்பட்டதுடன் குளவி கூடு, தீ வைத்து பொசுக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிலரே குளவிகள் கொட்டியுள்ளன. இதனையடுத்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றில் கட்டியிருந்த குளவி கூடு கலைந்து, பாடசாலைக்கு வருகைதந்து கொண்டிருந்த மாணவர்கள் சிலரையும் வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலரையும் கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூவரும் தொழிலாளர்கள் இருவரும் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கலைந்த குளவிகள் பாடசாலைக்குள் புகுந்தமையால் ஹட்டன் வலயக்கல்வி காரியாலயத்தின் அனுமதியுடன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
குளவி கூட்டை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையால், கோபமடைந்த தொழிலாளர்கள் தீயிட்டு பொசுகிவிட்டனர்.






31 minute ago
37 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
59 minute ago