Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 23 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் வைத்து திங்கட்கிழமை (23) அன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் முன்னால் பயணித்த லொறியை கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்ற போது, முச்சக்கர வண்டி சறுக்கிச் சென்று வீதியோரத்தில் உள்ள கொன்கிரீட் மேட்டில் மோதியுள்ளது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கோ சாரதிக்கோ விபத்தின் போது காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடும் பனி காரணமாக, வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
7 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago