Editorial / 2026 மே 05 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று (05) நாவலப்பிட்டி, திஸ்பனே சந்திப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் நாவலப்பிட்டி, மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட 11 மாணவிகளும், இரண்டு மாணவர்களும் அடங்குவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். குலதுங்கவின் வழிகாட்டலில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026