2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

பாதசாரி கடவையில் கடந்த பாதசாரி பலி

Editorial   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில், (வெள்ளைக் கோட்டில்) வீதியைக் கடந்தவர் லொறி மோதியில் மரணமடைந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் (33) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

வேலைக்குச் செல்வதற்காக காலையில் அவசர, அவசரமாக பாதசாரி கடவையில் கடந்த இவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித்தள்ளியுள்ளது. படுகாயமடைந்த நிலையில், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X