Janu / 2023 ஜூன் 18 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன், பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி சிக்கியது
அந்த பாரவூர்தியில் 20 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேலதிகமாக 33 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியும் 35 லட்சம் ரூபாய் பிணைமுறியில் விடுவிக்கப்பட்டார். தடுத்துவைக்கப்பட்ட பாரவூர்தியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 33 மரக் குற்றிகள் தொடர்பில் ஹட்டன் வன இலாகா காரியாலயத்தின் அறிக்கையை ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.
அந்த அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் சாரதி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி தெரிவித்தார்.
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago