2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாராளுமன்றம் முதல் பாதையோரம் வரை தன் குரல் ஒலிக்கும்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தன்னுடைய கடமையும் பொறுப்புமாகும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் , ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் பாராளுமன்றம் முதல் பாதையோரம் வரை தனது குரல் ஒலிக்கும் என்றார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆயிரம் ரூபாய் அடிப்படை வேதனம் என்ற கோரிக்கை ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த வாழ்க்கை செலவுக்கு போதுமானதாக இருந்தமையினால் முன்மொழியப்பட்டது.

 ஆனால் தற்சமயம் அதுகுறித்து செல்லும் வாழ்க்கை செலவிற்கு ஏற்றாற்போல்  குறைந்தது 2,500 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் . பெருந்தோட்ட மலையக மக்களின் வாழ்க்கைப் பின்னணி வாழ்வாதார சிக்கல் என்பவற்றை நன்கு அறிந்து உணர்ந்தவன் என்ற ரீதியிலும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மக்களின் தேவைப்பாடுகளை கருத்திற்கொண்டு  தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.

அதன் காரணமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  2,500 ரூபாவை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். விமர்சனங்கள் ஆயிரம் எழலாம் ஆனால் என் தொப்புள் கொடி உறவுகளுக்காக பாராளுமன்றம் முதல் பாதையோரம் வரை என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என கருத்து தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X