Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 மே 02 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை – எல்ல – கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்ல - கரந்தகொல்ல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் விளைவா? இல்லையா என்பதை கண்டறிவதற்காக தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று, எல்ல கரந்தகொல்ல மற்றும் மலித்தகொல்ல பகுதிகளை நேற்றைய தினம் ஆய்வு செய்தது.
அதன்படி கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிறப்புக் குழுவினால் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன கருத்துரைக்கையில்,
'குறித்த மண்சரிவு அபாயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக" தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளின் அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாக இதை உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago