Ilango Bharathy / 2021 ஜூலை 29 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள, பலாங்கொடை- ரஜவக்க
சுண்ணாம்புக்கல் இயற்கை நீரூற்று வலயத்தினுள், உல்லாசப் பயணிகளுக்கு செல்ல
அனுமதிக்குமாறு பொதுமக்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள்
வேண்டுகோள் விடுக்கின்றன.
இப்பிரதேசத்துக்கு சுற்றுலா வரும் சிலரால், இயற்கை வளங்களுக்கு ஏற்படுத்தப்படும்
பாதிப்புக்கள் காரணமாக, இயற்கை நீருற்றுப் பிரதேசத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் உள்
நுழைவதைப் பலாங்கொடை பிரதேச சபை தடை செய்துள்ளது.

எனினும் ,இந்த இயற்கை நீருற்றைக் கண்டுகளிக்க பெரும் எண்ணிக்கையான உல்லாசப்
பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், இப்பிரதேசம் பலாங்கொடை பிரதேச
சபையினால் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
எனவே, இதனை மீண்டும் திறப்பதன் மூலம் உல்லாசப்பயணிகளை கவரவும்,
பலாங்கொட பிரதேச சபைக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026