Freelancer / 2023 மார்ச் 27 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி ஹீரஸ்ஸகல ரயில் மேம்பாலத்துக்கு அருகில், கண்டியில் இருந்து பதுளையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டதில், 15 வயதான மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கண்டியில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர், மெதபோவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 4.50 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடப்பதற்காக ரயில் மேம்பாலத்தை பயன்படுத்தாத அந்த மாணவன், ரயில் தண்டவாளத்தில் நடந்துசென்று கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்றியப்பட்டுள்ளது என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .