2026 ஜனவரி 21, புதன்கிழமை

பாலம் அமைக்குமாறு கோரிக்கை

Ilango Bharathy   / 2021 ஜூன் 22 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. மஹிந்தகுமார்

இரத்தினபுரி- பம்பரளகந்த பிரதேசத்திலுள்ள பாண்டி ஆற்றை கடந்துச் செல்ல பாலம் ஒன்று இன்மையால் அப்பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதுவரை குறித்த ஆற்றைக் கடக்க முயன்ற 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


பாண்டி ஆற்றை கடந்து செல்வதே இம்மக்களுக்கு இலகுவாக பாதையாக உள்ளதாகவும்,
இல்லாவிட்டால் பம்பரளகந்த பிரதேசத்திலிருந்து 5 கிலோமீற்றர் சுற்றியே தமது பிரதேசத்துக்கு
வரவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த ஆற்றைக் கடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாகத்
தெரிவித்துள்ள பிரதேசவாசிகள்,வாகனங்கள் செலுத்திச் செல்லுமளவுக்கு தமக்கு பாலம் ஒன்று
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நடந்து செல்வதற்காக ஒரு கம்பி பாலமென்றாலும் அமைத்து
தருமாரு கோரிக்கை விடுக்கின்றனர்.

சாதாரண நாள்களில் எவ்வித பிரச்சினையுமின்றி இந்த ஆற்றைக் கடந்து செல்லும் அதேவேளை, மழைக்காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஆற்றை கடக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X