Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலுகுமார் எம்.பி தெரிவிப்பு
மலையகத் தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் இதர உரிமைகளை
வென்றெடுப்பதற்காகவும், இருப்பவற்றை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அனைத்து
வழிகளிலும் நாம் போராடுவோம் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், இதற்கு சர்வதேச தலையீடு அவசியமெனில் ஐ.நா.
உள்ளிட்ட அதன் கிளை அமைப்புகளை நாடுவதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
நேற்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
”இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை திட்டமிட்ட அடிப்படையில்
வஞ்சிக்கப்படுகின்றனர். சாதாரண மனிதரொருவருக்கு கட்டாயம் கிடைக்கவேண்டிய -
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்கூட எமது மக்களுக்கு காலம் கடந்தே கிடைத்தன.
ஆனால் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலைமையை மாற்றியமைத்து நல்லாட்சியின்போது குறுகிய நான்கரை வருட காலப்பகுதியில் முக்கியமான சில விடயங்களை நாம் நிறைவேற்றினோம். சமூக மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தையும் சிறப்பாக இட்டிருந்தோம்.
குறிப்பாக பெருந்தோட்டப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை
முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
ஆனால் பெருந்தோட்ட மக்களை பின்நோக்கி கொண்டுசெல்வதற்கான நகர்வுகள் தற்போதைய ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய காணி உரிமையை வெளியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
சிறுதோட்ட உரிமையாளர் என்ற எண்ணமும் குழிதோண்டி புதைப்பதற்கான நகர்வு
இடம்பெறுகின்றது. எமது மக்களை தொடர்ந்தும் நாட் கூலிகளாக வைத்திருக்கவும், உரிமைகளை மறுப்பதற்கான வியூகமும் அரங்கேற்றப்பட்டுவருகின்றது என்றார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago