Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 20 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல், கொட்டகலையில் அமைந்துள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப நிலையத்தில் (சி.எல்.எப்), இன்று (20) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐந்து பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் இ.தொ.கா உறுப்பினர்களினூடாக, அவரவர் பிரதேசங்களில், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக, தலா பத்து தொடக்கம் பதினைந்து இலட்சம் ரூபாய் ஒதுக்குவதுத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .