2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபைகளை அதிகரிக்குமாறுஇ.தொ.கா முன்மொழிவு

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா மாவட்டத்தில், தற்போதுள்ள 5 பிரதேச சபைகளை 12 ஆக அதிகரிக்கும் வகையில் முன்மொழிவுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கையளித்துள்ளது.  மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமே, இந்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணம், அவருடைய அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  

இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஷ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் ஏ.பிலிப்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினரே, இந்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தைக் கையளித்தனர்.  

குறிப்பாக, நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை, அம்பேகமுவ, நோர்வூட், மஸ்கெலியா, வலப்பன, இராகலை, கொத்மலை, திஸ்பன, ஹங்குராங்கெத்த மற்றும் மத்துரட்ட ​ஆகிய பிரதேச சபைகளை நிறுவுமாறே, அந்த முன்மொழிவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .