2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மலையக தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்தார்

Simrith   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து மலையக ஊடகவியலாளர்கள் கலந்துரையாடினர்.

பிரித்தானிய அரசாங்கமே மலையக மக்களை இலங்கைக்கு அழைத்துவந்தது எனவே ஏனைய நாடுகளைவிட பிரித்தானிய அரசாங்கம் மலையக மக்கள் விடையத்தில் கூடுதல் கரிசணை கொண்டிருக்க வேண்டும் என ஊடகவியலாளர்கள் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்கள்.

இந்தச் சந்திப்பு நுவரெலியாவில் நேற்று புதன்கிழமை (27)  இடம்பெற்றது.

மலையகத்தை சேர்ந்த பிராந்திய ரீதியில் கடமையாற்றும் மற்றும் தலைநகரில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும்  உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், மலையக மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், காணி மற்றும் வீட்டு உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில், ஊடகவியலாளர்களான ஜே.ஏ.ஜோர்ஜ், பா.நிரோஸ்குமார், ராம் மற்றும் சதீஸ் ஆகிய பங்கேற்றிருந்தனர்.

மலையக மக்களின் பிரச்சினைகளை சிரத்தையுடன் செவிமெடுத்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் மலையக தமிழ் ஊடகவியலாளர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .