2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பிளக்வூல் பகுதியிலுள்ள வீடொன்றில் தீபரவல்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிளக்வூல் பகுதியிலுள்ள வீடு ஒன்று இன்று (12) காலை தீபரவலுக்கு உள்ளானது.

தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் நுவரெலியா மாநகர சபை தீ அணைக்கும் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் செல்லும் முன்னர், அயலவர்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத் தீவிபத்தால் உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியா பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X