2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பீடியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சட்டவிரோதமாக பீடி தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒருவரை, ஹட்டன் பொலிஸார், நேற்றுக் காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 1,430 பீடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, 143 பீடி பண்டல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பண்டல்களில், சுகாதார எச்சரிக்கை விளம்பரம் மற்றும் லேபில்கள் எதுவும் ஒட்டப்படிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பீடியைத் தயாரித்து நிறுவனமொன்றுக்கு வழங்குவதாகவும் அந்நிறுவனமே, சுகாதார எச்சரிக்கை விளம்பரம் மற்றும் லேபல்கபளை ஒட்டி, வியாபார நிலையங்களுக்கு விநியோகிக்கும் என்றும், சந்தேக நபரால் பொலிஸாருக்கு வாக்குமூலமளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .