Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
அதி வணக்கத்துக்குரிய புதிய ஆயர் துஷாந்த ரொட்ரிகோ, மஸ்கெலியாவுக்கு நேற்று (13) விஜயம் மேற்கொண்டார்.
அவர் புதிய ஆயராகப் பதவியேற்றதன் பின்னர் முதன் முறையாக மஸ்கெலியாவுக்கே விஜயம் மேற்கொண்டுள்ளார் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பில் அராய்வதற்காக அவர் மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்திலிருந்து மஸ்கெலியா நகர் வழியாக, குயின்ஸ்லேன்ட் தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் விசேட ஆராதனையும் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை டிக்சனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அருட்தந்தையர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026