2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை “கூட்டணி ஆதரிக்காது”

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு தமிழ்
முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காதுயென தொழிலாளர் தேசிய
சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்
எம்.பியுமான  பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பிரதேசத்தில்  ஞாயிற்றுக்கிழமை (02)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்து இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது.  இந்த அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் . நாட்டில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது மக்கள் வாழ்வாதார பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்தும்
தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி முறையான
சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  தற்போது உள்ள அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்று கொண்டு எந்தவோர் அபிவிருத்தி திட்டத்தையும்
முன்னெடுக்கமுடியாது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த
காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றார்.

மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவன் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அமைச்சி பதவி தேவையில்லை மலையகத்தில் மாத்திரம் அல்ல நாட்டில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பிரச்சினை காணப்படுகிறது என்றார்.

எதிர்வரும் காலங்களில் சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தில் அபிவிருத்தி
திட்டங்கள், முதல் படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பையும் பெற்று
கொடுப்பேன். அதேபோல் பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்றி காட்டுவேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .