2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய ரயிலில் பயணிக்க அதிகளவானவர்கள் ஆர்வம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை வார இறுதி நாட்களில்  புதிதாக போக்குவரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள  ரயிலில் பயணிக்க அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் கொண்டுள்ளனர் என ஹட்டன் ரயில் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் அதிகாலை 5.30 கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கம் 1041 இலக்க விசேட ரயிலானது, மாலை 3.45 மணியளவில் பதுளையை சென்றடையவுள்ளது.

குறித்த ரயிலானது சில முக்கிய ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்து செல்வதுடன், ஹட்டனிலிருந்து பதுளை வரை உள்ள நீர்வீழ்ச்சிகள், சுற்றுலா இடங்கள் என்பவற்றை ரயிலில் பயணித்தவாறே கண்டுகழிக்கவும் புகைப்படங்கள் எடுப்பதற்காகவும் 10 நிமிடங்கள் குறித்த இடங்களில் தரித்து நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டு, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இரண்டு, மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இரண்டு என்பவற்றுடன் சிற்றுண்டிச்சாலையும் காணப்படுகின்றது.

இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே ஆசனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X