2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டம், எட்டியந்தோட்டை, தொம்பேபொல பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் புதையல் தோண்டிய நால்வர் புதன்கிழமை (20) அன்று எட்டியந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.  

சந்தேக நபர்கள்  மலல்பொல, பருஸ்ஸெல்ல, கிரிந்திவெல மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 41 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மொரொன்தொட ஆரச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X