2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய பெண் கைது ; கணவன் தப்பியோட்டம்

Janu   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

119 அவசர அழைப்பு சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அத்திமலை பொலிஸாரால், அத்திமலை ,வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் தங்களின் நிலத்தின் கீழ் புதையல் இருப்பதாக நம்பி நீண்ட காலமாக தோண்டி வந்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார்  புதையல் தோண்டிக் கொண்டிருந்த 29 வயதுடைய பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவரது கணவன் தப்பியோடியுள்ளார்.

இதன்போது  நான்கு விளக்குகள், பூஜை பொருட்கள், ஒரு மண்வெட்டி மற்றும் ஒரு வாளி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவரின் கணவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .