2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்ட முயற்சி; எழுவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை - மஹவலதென்ன ஸ்ரீ சந்திரசேகர முதலிந்தாராமய விகாரையில், புதையல் தோண்டுவதற்கு முயற்சித்தனர் என்றக் குற்றச்சாட்டில், பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரிகள் உட்பட ஏழு சந்தேக நபர்களை, பலாங்கொடைப் பொலிஸார், நேற்று (30) கைதுசெய்துள்ளனர்.

ஹோமாகம, பாதுக்க, ஒபனாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படிப் பகுதியில் விசேட சோதனையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி எழுவரையும் கைதுசெய்துள்ளதுடன், ஆடம்பர சொகுசு காரொன்றில் அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருள்கள், கார் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .