Editorial / 2025 ஜூலை 18 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஷ், எஸ்.கிருஷ்ணா
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி மாதிரி வினாத்தாள்கள், வெள்ளிக்கிழமை (18) கையளிக்கப்பட்டது.
கோட்டம் -01, கோட்டம்- 0 மற்றும் 2 கோட்டம்- 03 ஆகிய பிரிவின் 103 பாடசாலை சேர்ந்த 2,782 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
நோட்டன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் சீடா வள நிலையத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் பணிப்பாளர் சிவகுமார் , நோட்டன் வாசகர் வட்டத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான நோர்ட்டன் ராம் , உறுப்பினர்களான அற்புதநாதன், பிரபு மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
14 வருடமாக கல்வி ஊக்குவிப்பு பணியை முன்னெடுத்து வரும் புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினால் 2025 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள தமிழ் மொழி மூல 20,000 மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் நற்பணியில் ஹட்டன் கல்வி வலயத்துக்கான விநியோக பணியில் நோர்ட்டன் வாசகர் வட்டமும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.




1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025