2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பூட்டிய கடைகளை திறந்த இளைஞன் கைது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 18 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுபாடு காரணமாக இரத்தினபுரி நகரில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள ஏழு வியாபார நிலையங்களில் தங்க நகை மற்றும் பணத்தை திருடிய இளைஞன், நேற்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, கனாதோல பகுதியை சேர்ந்த சந்தேக நபரான குறித்த இளைஞன், பெற்றோரை இழந்த நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி நகரில் உள்ள மூன்று நகைக்கடைகள், ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை, இரண்டு ஹொட்டல்கள் மற்றும் டிஜிட்டல் அச்சகம் என்பவற்றில் குறித்த இளைஞன், பூட்டுகளை திறந்து கைவரிசையை காட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விற்பனை நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கமெராக்களில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X