2026 ஜனவரி 21, புதன்கிழமை

பூண்டுலோயாவில் பெண் கொலை

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில், தனிப்பட்டக் குரோதம் காரணமாகப்  பெண்ணொருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 2  பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய பெண்ணொருவரே, கொலை செய்யப்பட்டுள்ளாரெனப்  பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில்,  கொலைசெய்யப்பட்ட  பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், அப்பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து  வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேட்டியொன்றில் முகத்தைக் கட்டி, சரமாரியாக கத்தியால் வெட்டி இக்கொலையானது இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவெரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X