2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட எண்மருக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட எண்மருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நிகழ்வில் பங்கேற்றவர்களைக் கண்டறியும் பணியில் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட எண்மரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களும் மேற்படிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுமே  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X