Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 17 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
உள்ளூராட்சி மன்றங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் செயலூக்கமுள்ள பெண் தலைவர்களுக்கு "மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துதல்" தொடர்பான இரண்டு நாள் வதிவிட வசதிகளுடன் செயலமர்வு கடந்த 14-15 ஆம் திகதிகளில் நுவரெலியா ( Queensberry Hotal ) குயின்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த வதிவிட செயலமர்வு பயிற்சியின் அமர்வுகள் மூலம் உள்ளூராட்சி நிறுவனத்தில் பெண்களின் தேவை மற்றும் முக்கியத்துவம், மக்கள் பிரதிநிதிகளாக ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் மற்றும் சமூகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் பாலின சமத்துவம், பெண்களின் உரிமைகள் சலுகைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பாதுகாப்பு, நிறுவனங்களின் அரசியலமைப்புகள் மற்றும் ஒழுங்கு முறைகள் கையாளுவது குறித்து விரிவான விளக்கங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சுமார் 80 பெண் உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவிருக்கும் பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago