Editorial / 2018 ஜூலை 09 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், எஸ்.கணேசன்
பொகவந்தலாவ - நோர்வூட் பிரதான வீதி, காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் கால்வாயிலிருந்து, பெண்ணொருவரின் சடலத்தை, நோர்வூட் பொலிஸார், இன்று(9) காலை மீட்டுள்ளனர்.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாகவே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்றும், சம்பவ இடத்துக்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .