Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீதா எலியா, சண்டதன்ன சுற்றுச்சூழல் பூங்காவிலுள்ள பெயர் பலகைகள் மற்றும் உயரங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் சிலரால் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சீதாஎலியா விவசாய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீதா எலியா வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் எம். சி. ஜயசிங்க தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள 10 மிக உயரமான மலைத்தொடர்களில் ஒன்பது மலைத்தொடர்கள் இந்த இடத்தில் காணப்படுகின்றன. பிதுரங்கல, தொட்டுகொலை கந்த, கிகிலியாமான, கிரேட் வெஸ்டன், கொனிகல் ஹில், கிரிகல்பொத்த, பரியால கந்த, ஹக்கல மற்றும் நமுனுகுல மலைத்தொடர்களின் பெயர் பலகைகள் மற்றும் அவற்றின் உயரங்களை குறிக்கும் பெயர் பலகைகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
சண்டதன்ன சூழலியல் பூங்காவை பார்வையிட வந்தவர்கள் அல்லது காடுகளில் இருந்து பூங்காவுக்குள் பிரவேசித்த சிலரோ அல்லது குழுக்களோ இந்த நாசக்கார செயலை செய்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சண்டதன்ன சூழலியல் பூங்கா மிகவும் உணர்திறன் வாய்ந்த சூழலியல் வலயத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அவ்வாறான சேதங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்குமாறும் கேட்டுக் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் நினைவு படுத்தினார்.
பி.கேதீஸ்
53 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
15 Jan 2026