Editorial / 2018 ஜூலை 02 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
காவத்தை நகரில், நேற்று(01) இரவு இடம்பெற்ற பெரஹெரா நிகழ்வில், இரண்டு யானைகள் குழம்பியதில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 27 பேர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் பொலிஸ் அதிகாரி உட்பட எண்மர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவத்தை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றையும் யானை சேதமாக்கி உள்ளதுடன், வீதியோர வியாபாரிகளின் விற்பனை பொருட்களையும் சேதமாக்கி உள்ளது.
பெரஹெரா நிகழ்வில் 15 யானைகள் இருந்ததுடன் இதில் இரண்டு யானைகள் கட்டுபாட்டை மீறி குழம்பியதுடன் ஏனைய யானைகளும் கட்டுபாட்டை மீறி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கின எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, மக்கள் ஓடத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .