2025 மே 12, திங்கட்கிழமை

பெருந்தோட்டங்களில் ’சுகாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும்’

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவராக்ஷான்

மலையகப் பகுதிகள் உள்ளடங்களாக, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்  மு.சுரேஷ்குமார் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் காலை 7.45 மணிக்கு பணிக்குச் செல்கின்றனர் என்றும் 9.30 மணிக்கு கொழுந்நு நிறுவைக்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், அதன் பின்னர் அவர்களுக்கு தேனீர் இடைவேளை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

பெரும்பாலானத் தொழிலாளர்கள், காலை உணவை அவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் இடைவேளையின்போதே உண்ணுகின்றனர் என்றும் இதன்போது அவர்களுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். 

குறிப்பாக ஒவ்வொரு தேயிலை மலைகளிலும்  நீர்தாங்கி வைத்தல், பொதுஇடங்களில் நீர்க்குழாய்களைப் பொருத்துதல், முகக்கவசம், கைக்கழுவும் திரவங்களை வழங்குதல் உள்ளிட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுத் தொடர்பில், தோட்ட நிர்வாகங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X