ஆ.ரமேஸ் / 2020 மே 04 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 பாதிப்புக்கு பின்னர், அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் பல்வேறு வரையறைகளில் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்டப் பகுதிகளில், நிரந்தரமாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் தினக்கூலிகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என்றும் சமூர்த்தி நிவாரணம் பெறாத, எந்தவொரு தொழிலும் செய்யாமல் இருக்கும் குடும்பத்தினருக்கு மாத்திரமே இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தெரியவருகின்றது.
தோட்டங்களில் நிரந்தரமாகப் பணியாற்றுவோருக்கு, கம்பனிகளால் சம்பளம் செலுத்தப்படுவதாக, கிராம உத்தியோகத்தர்களால் காரணம் கூறப்படுவதாகவும் அவ்வாறு அவர்களுக்கு மாதத்துகு்கு 4,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு மேலதிகமாக 1,000 ரூபாயை வழங்கி, 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு விட்டதாக பதியப்படுவதாக, தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும் இல்லயேல், தோட்ட நிர்வாகத்திடம் கடிதமொன்றைப் பெற்றுக்கொண்டு வருமாறு பணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தினக்கூலிகளாகப் பணியாற்றுவோருக்க, கம்பனிகள் கடிதங்களை வழங்குவதில்லை என்றும் இதனால், தாங்கள் வாழ்வாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செல்லும்போது, பணம் கொடுக்க முடியாது என்று நிராகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலையில்லாம் இருப்போருக்கு நிவாரண உதவி கொடுக்கவேண்டும் என்றாலும், தாங்களும் நாளாந்தம் சிரமத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும் எனவே, தங்களுக்கும் இந்த நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026