Kogilavani / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொழில் உரிமை, வீட்டு உரிமை, காணி உரிமை மற்றும் வாழ்வுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், அடுத்த வருடமேனும் மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கிடைக்குமென, நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் அது கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் தொழிலமைச்சும் தொழில்சட்டமும் இருந்தபோதும்கூட மலையக மக்களைப் பொறுத்தமட்டில் அவை செயற்படுகின்ற விதம் கேள்விக்குறியாகவே உள்ளதென்றும் பெருந்தோட்ட மக்களின் வழக்குகள் பல இன்றுவரை மழைநீரைப் போல தேங்கிக் கிடக்கின்றன என்றும் தெரிவித்தார்.
தொழில் வழக்குகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களின் ஓய்வுகாலம்வரை தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் நாள்களை நகர்த்த வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அடாவடிச் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் எனவும் தொழ்ற்சாலை நிர்வாகங்களின் சீர்கேடுகள் காரணமாக மலையக மக்கள், தொழிலைவெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026