Janu / 2026 மார்ச் 16 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பற்றிக் கல்லூரி (St. Patrick's College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த சிறிய ரக பேருந்து, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதில் பாடசாலை பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த தலவாக்கலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செ.தி. பெருமாள்

5 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
09 May 2026
09 May 2026