Gavitha / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயினா கீழ்ப்பிரிவு தோட்டத்தில், 6 பேருக்கு இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தோட்டத்தில், 28ஆம் திகதி, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தாருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோட்டத்தில் முதலில் இனங்காணப்பட்ட தொற்றாளர், பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தக நிலையத்துக்குச் சென்றமையால், வர்த்தக உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதுடன், அவருடன் தொடர்பைப் பேணி வந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026