R.Maheshwary / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பொகவந்தலாவை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த வங்கியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்கள் ஆறு பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொகவந்தலாவை சுகாதார அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வங்கியின் பணியாளர்கள் சிலருக்கு தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே, ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .