2025 மே 12, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் 100 பேர் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ் 

பொகவந்தலாவையில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

பொகவந்தலாவையிலுள்ள கோவில் ஒன்றில், 28ஆம் திகதி இரவு இடம்பெற்ற பூஜையில் கலந்துகொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பூஜையில் கலந்துகொண்ட 20 பேரின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

பொகவந்தலாவை பொதுசுகாதார பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X