R.Maheshwary / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
அக்குறனை நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்,கடுமையாக சுகவீனமுற்ற நிலையில் வீதியில் விழுந்து கிடந்த ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
எனவே, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர், சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அக்குறனை நகரில் சுகவீனமுற்ற மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அக்குறனை பொலிஸார், அந்நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், அவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த நபர் அக்குறனை நகரில் கூலித் தொழில் ஈடுபடுபவர் என்று கூறப்பட்ட போதும், இவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் 3 மாதங்களாக இவரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால், இவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago