Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவர், பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளமை தொடர்பில், ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, ஹட்டன் - டிக்கோயா நகரம், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி கிருமிநாசினி தெளிக்கும் நடவக்கையில், ஹட்டன்-டிக்கோயா நகரசபை ஈடுபட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி, ஹட்டன், டிக்கோயா நகரில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் அளுகால பகுதியில் வீதியோரம் மரக்கறி வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது.
இதனையறிந்து குறித்த இடத்துக்குச் சென்ற சுகாதார பரிசோதகர், தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மதித்து உடனடியாக வியாபார நடவடிக்கையை நிறுத்துமாறு வியாபாரிகளுக்குப் பணித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்கு வந்த ஹட்டன் - டிக்கோயா நகரசபை உறுப்பினர், பொதுசுகார பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார் என்று தெரியவருகிறது.
இதனையடுத்து பொதுசுகாதார பரிசோதகர், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பின்னர் இருசாரரும் பேசி சமரசமாகியுள்ளனர் என்றுத் தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago